உங்கள் தனிப்பட்ட தகவல்கள் ‘வாட்ஸ்அப்பிலிருந்து முகநூலுக்கு’ பகிரப்படாமல் தடுப்பது எப்படி?
வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் இருந்த இடத்திலிருந்தே அனைத்து வேலைகளையும் செய்வதற்கு எளிதாக இன்டர்நெட் மூலம் உள்ளங்கையிலே உலகத்தை கண்டு வருகிறோம். ஆனால்,  ஒரு சில கவனக்குறைவினாலும், அதீத ஆர்வத்தாலும் நாம் செய்யும் சில செயல்களால் அதிக அளவு பாதிக்கப்படுவதும்  இந்த தொழில்நுட்ப வளர்ச்சியினால்தான் என்று சொன்னால் மிகையாகாது.
தற்போது அதிகமானவர்களால் உபயோகப்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ்அப், பேஸ்புக், டிவீட்டர் போன்ற சமுக வலைதளங்களால் நமது தனிப்பட்ட தகவல்கள்  தெரிந்தோ, தெரியாமலோ அனைவரும் பகிரப்பட்டு விடுகிறது.  தற்போது  நாம் உபயோகப்படுத்தும் வாட்ஸ்அப் தகவல்கள், பேஸ்பேக்குக்கும் பகிரப்படுகிறது.  இது போன்று பகிரப்படுவதை தடுப்பது எப்படி?
Terms and Conditions என்ற தலைப்புடன் கூடிய புதிய திரை ஒன்று உங்கள் வாட்சப்பில் திடீரென்று தோன்றியதை சமீபத்தில் நீங்கள் கவனித்திருக்கலாம். முகநூல்(Facebook) நிறுவனத்துடன் சமீபத்தில் இணைக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்முறையாக வாட்சப் நிறுவனம் தனது கொள்கைகளை மறு வரையறை செய்து வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பயனாளரின் மொபைல் எண் உள்ளிட்ட சில தகவல்களை வாட்சப் முகநூலுடன் பகிர்ந்து கொள்ளும். பயனாளர்கள் இதுகுறித்து அச்சமடையத் தேவையில்லை. இது தனது விளம்பர சேவையை உங்களுக்கு மேம்படுத்தித் தரத்தானேயொழிய மற்றபடி உங்கள் தனிப்பட்ட இரகசியங்கள் எப்போதும்போல பாதுகாக்கபடும் என்று வாட்சப் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் வாட்சப், முகநூல் இரண்டும் பயனாளர்களின் தகவல்களை பகிர்ந்துகொள்வது இரண்டு சேவைகளின் தரத்தையும் மேம்படுத்தும். ஸ்பேம் போன்ற இணைய தொந்தரவுகளை மேலும் வலிமையுடன் தடுக்க முடியும்.
watsupfacbook
அதுமட்டுமன்றி நீங்கள் விரும்பும் பொருட்களை கண்டறிந்து அதுகுறித்த விளம்பரங்களை உங்களுக்கு தர முடியும். ஆனால் அது பேன்னர் வடிவ விளம்பரங்கள் போன்று சலிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்காது , பயனாளர்கள் விரும்பும் வகையிலும் எளிதில் பயன்படுத்தும் வகையிலுமான விளம்பர வடிவமாக அது இருக்கும். நீங்கள் அதையும் விரும்பாவிட்டால் அதையும் தடுக்கும் வகையில் பயனாளர் அதிகாரமும்கூட உங்களுக்கு அளிக்கப்படும் என்று வாட்சப் தனது தளத்தில் வெளியிட்ட தகவலில் தெளிவுபடுத்தியிருக்கிறது.
வாட்சப் உங்கள் தகவல்களை முகநூலுடன் பகிர்ந்துகொள்வதை நீங்கள் விரும்பாத பட்சத்தில் கீழ்கண்ட செயல்முறை மூலம் எளிதாக நீங்கள் அதை தடுக்க முடியும்:
1. உங்கள் வாட்சப் செயலியை திறந்து கொள்ளுங்கள்
2. ஆண்ட்ராய்டில் “ஆக்‌ஷன் ஓவர்ஃப்ளோ” என்ற பொத்தானை அழுத்தி அதன் மேல் வலது மூலையில் உள்ள செட்டிங்ஸ் என்ற இணைப்பை அழுத்தவும். ஐஃபோன் பயனாளர்கள் கீழ் வலது மூலையில் இருக்கும் செட்டிங்ஸ் என்ற இணைப்பை அழுத்தவும்
3. “அக்கவுண்ட்” என்ற இணைப்பை அழுத்தவும்
4. நீங்கள் உங்கள் தகவல்களை வாட்சப் முகநூலுடம் பகிர்ந்துகொள்ள விரும்பினால் “ஷேர் மை அக்கவுண்ட் இன்ஃபோ” என்ற தெரிவை செக் செய்யவும்
5. நீங்கள் உங்கள் தகவல்களை வாட்சப் முகநூலுடம் பகிர்ந்துகொள்ளக்கூடாது என்று விரும்பினால் ” டோண்ட் ஷேர்” என்ற தெரிவை செக் செய்யவும்.
இந்த செயல்முறை மூலம் வாட்சப்-முகநூல் தகவல் பகிர்வை நீங்கள் கட்டுப்படுத்த முடியும். ஒருவேளை நீங்கள் பகிர்ந்துகொண்டாலும் கூட உங்கள் மொபைல் எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் முகநூலில் மற்ற பயனாளர்கள் பார்க்கும் விதத்தில் எப்போதும் வெளியிடப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.