தென்கிழக்கு ஆசியா முழுவதும் புகை மூட்டம்! இந்தோனேசியா மீது குற்றச்சாட்டு!!

Must read

இந்தோனேசியாவில் எரிக்கப்படும் காடுகளால், தென்கிழக்கு ஆசிய பகுதிகள் புகை மண்டலமாக  காட்சி அளிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்தோனேசியாதான் தென்கிழக்கு ஆசிய நாடுகள்  கூறியுள்ளன.
தென் கிழக்கு ஆசிய நாடுகள் புகை மாசு காரணமாக, புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. இதற்கு காரணம் இந்தோனேசியா தான் என மலேசியாவும் சிங்கப்பூரும் குற்றம் சாட்டி  உள்ளது.
இந்தோனேசியாவில் தொடர்ந்து காடுகளும் பழமை வாய்ந்த மரங்களும் எரிக்கப்பட்டு வருகின்றது.  அதை விளைநிலங்களாகவும் லாபம் கொழிக்க கூடிய பனை மரங்களை வளர்க்கவும் பயன்படுத்துகின்றனர்.  இதன் காரணமாக காற்று மாசு ஏற்படுவதால் இந்தோனேசியாவின் அருகில் உள்ள  அண்டை நாடுகளில் சுவாசம் சம்பந்தமான நோய்களும், அதன் காரணமாக மரணங்களும் ஏற்படுகின்றன.

மற்ற நாடுகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, இந்தோனேசியஅரசு காடுகளை எரிக்க தடை விதித்து அதிரடி நடவடிகை எடுத்து உள்ளது. தனது 6 மாகாணங்களில், காற்று மாசு ஏற்படுவதை தடுக்க அவசர நிலையை பிரகடனபடுத்தி  நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுகுறித்து கூறிய சிங்கப்பூர் பிபிசி செய்தியாளர், தாங்கள் வசிக்கும் கட்டிடத்தினுள்ளே வரை புகை படர்ந்திருப்பதாக கூறினார். PSI என்னும் காற்று மாசுபாட்டை அளக்கும் அளவி மூலம் அளக்கப்பட்டதில் 215 PSI என பதிவாகி உள்ளது. 100PSI க்கு மேல் இருந்தாலே அது உடல்நலத்திற்கு கேடாகும்.
ஏற்கனவே பரிசோதனை செய்ததில்  300 PSI வரை இருந்ததாகவும் தற்போது சற்று குறைந்துள்ளதாகவும் கூறினார். இந்தோனேசியாவில் அடிக்கடி இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. கடந்த வெள்ளி அன்று இதுபோல் நூறுக்கும் மேற்பட்ட இடங்களில் காடுகள் எரிக்கப்பட்டு உள்ளது. இதன் காற்று மாசு அதிகமாக ஏற்படுகிறது.
விசாரணையில், தேவையற்ற மரங்களை அழித்துவிட்டு, அதில் விவசாயம் மற்றும் பனை மரம் வளர்க்க முயற்சி மேற்கொள்வதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இந்தோனேசியா அரசு இதுவரை 450  பேரை கைது செய்துள்ளதாகவும் மேலும் அதிபர் தீயை அனைக்க கூடுதல் கவனம் செலுத்துவதாகவும் அறிவித்து உள்ளது.
இந்த புகை மண்டலம் காரணமாக இந்தோனேசியாவில் வசிக்கும் மனிதர்களின் சுவாச மண்டலம், நுரையீரல் பாதிக்கப்பட்டு உடல் நலப்பாதிப்பு ஏற்படுகிறது.

More articles

Latest article