ராமநாதபுரம்: உலகின் முதல் சிவன் கோயிலான உத்திரகோச மங்கை சிவன்  கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. பல ஆயிரம் பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு, சிவனருள் பெற்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது, உலகின் முதன் முதலில் தோன்றிய சிவாலாயம் என்ற பெருமைப்பெற்ற உத்தரகோசமங்கை மங்களேசுவரி உடனுறை மங்களநாதர் கோவில். இந்த கோவிலுக்கு  15 ஆண்டுகளுக்கு பிறகு  இன்று (2025 ஏப்ரல் 4ந்தேதி) வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக,  தமிழ்நாடு அரசு, சமஸ்தான தேவஸ்தானம், மற்றும் நன்கொடையாளர்களின் ஆதரவுடன் பல கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், கும்பாபிஷேகத்திற்கான பணிகள் மற்றும் யாகசாலை பூஜைகள்  கடந்த சில நாட்களாக நடைபெற்ற வந்தது. இதைத்தொடர்ந்து, இனறு காலை காலை 9.30 மணிக்கு கோவில் கோபுரத்தில் சிவாச்சாரியாளர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

கோயில்களில் அன்னைத் தமிழில் வெகு சிறப்பாக குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு இறை அருள் பெற்றுள்ளனர். இந்த குடமுழக்கு வைபவங்களில் பெண் ஓதுவார்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் பங்கேற்று நடத்திக்கொடுத்துள்ளனர்.

இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்ப்டடிருந்தது. இதனால் மக்கள் கூட்டம் அலைமோதியது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு, மங்களேசுவரி மங்களநாதர் ஆசி பெற்றனர்.