சீனாவின் ஷாங்காய் நகரில் உலகின் முதல் ‘தங்க ஏடிஎம்’ நிறுவப்பட்டுள்ளது.

இந்த ‘தங்க ஏடிஎம்’மில் எந்தக் கடையில் வாங்கிய தங்கத்தை வைத்தாலும் அது அந்த தங்கத்தை உருக்கி அதன் தரம் மற்றும் எடை ஆகியவற்றை துல்லியமாக கணக்கிடுவதுடன் அன்றைய தேதியில் அந்த தங்கத்திற்கு நிகரான பண மதிப்பை காட்டுகிறது.

இதையடுத்து அந்த தங்கத்திற்கு நிகரான பணமதிப்பை பயனரின் வங்கி கணக்கில் வரவு வைக்கிறது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ள நிலையில் சீன மக்கள் தங்கள் கையில் உள்ள தங்கத்தை காசாக்க அதிகளவில் இந்த ஏடிஎம்-மை நாடுவதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் தங்கத்தை வாங்கியவர்கள் இந்த உச்சத்திலும் அதை பணமாக்குவது எப்படி என்று தெரியாமல் உத்திரத்தை பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் சீனர்களின் இந்த ஜெகஜால கண்டுபிடிப்பு அந்நாட்டு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

அதேவேளையில், இதுபோன்ற ‘தங்க ஏடிஎம்’ இந்தியாவுக்கு எப்போது வரும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளதோடு குறைந்தபட்சம் இங்குள்ள மக்கள் தங்கள் கையில் உள்ள தங்கத்தின் தரத்தையாவது பரிசோதிக்க ஒரு ஏ.டி.எம். வருமா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.