சென்னை:
பிரபல நகைச்சுவை நடிகர், கொடுமை செய்வதாக, அவரது மனைவி காவல்துறையில் புகார் செய்துள்ளார்.
பிரபல நடிகர் பாலாஜி, திரைப்படங்களில் நடித்து வருவதோடு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். சென்னை மாதவரம் சாஸ்திரி நகர், 2வது அவென்யூவவில் மனைவி நித்யாவுடன் வசித்து வருகிறார்.
பாலாஜியும், நித்யாவும் காதலித்து எட்டு வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு அவர்களுக்கு போர்ஷிகா, என்ற ஆறுவயது மகள் இருக்கிறார்.
தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு காரணமாக, சில மாதங்களாக, பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில் பிரபல ‘டிவி’யின் நடன நிகழ்ச்சியிலும் இது வெளிப்பட்டது. அப்போது அங்கிருந்த முக்கிய பிரமுகர்கள் சமாதானம் செய்து வைத்தனர்.
இந்த நிலையில் நித்யா, மாதவரம் காவல் நிலையத்தில் நேற்று, கணவர் பாலாஜி மீது புகார் செய்தார். அதில், தன் சமுதாயத்தை பற்றி தரக்குறைவாக பேசி, தன்னை கொடுமை செய்வதாக குறிப்பிட்டுள்ளார். .இது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.