புதுச்சேரி:
நாளை முதல் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை திறக்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் கொரோனா பாதிப்பு காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு வரை பள்ளிகள் ஐனவரி 10 முதல் காலவரையின்றி மூட்பட்டன. மேலும் கொரோனா பரவல் தீவரமடைந்த நிலையில் 10 ஆம் வகுப்பு முதல் கல்லூரிகள் வரை ஜனவரி 18 ஆம் தேதி முதல் மூடப்பட்டன.இதனிடையே கொரோனா பாதிப்பு நன்கு குறைய தொடங்கியதால், அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் நர்சரி வகுப்புகளுக்கு மட்டும் அனுமதி அளிக்காமல் இருந்தது.இந்நிலையில் புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை புது உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில் வரும் நாளை முதல் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி, நர்சரி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் 2021-2022 ம் கல்வி ஆண்டுக்கான எல்கேஜி மற்றும் யுகேஜி குழந்தைகள் பயிலும் பள்ளிகளை நாளை முதல் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.