புதுடெல்லி:
3.44 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசு சார்பில் மாநிலங்களுக்கு இதுவரை 57.05 கோடி தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது என்றும், மேலும் 3.44 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறார்களுக்குச் செலுத்தக் கூடிய 4 தடுப்பூசிகளை நடப்பு ஆண்டின் இறுதியில் ஒன்றிய அரசு அனுமதி அளிக்க உள்ளதால் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 15 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்குத் தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel