டெல்லி:  மூக்கு வழியாக செலுத்தும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்துக்கு  மத்தியஅரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.  புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளில் மீண்டும் பரவி வரும் நிலையில், மத்தியஅரசு மூக்கு வழியாக செலுத்தப்படும் நாசல் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.

தொற்று பரவலை தடுப்பதில் இந்தியஅரசின் பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனத்தின் தடுப்பூசிகள் பெரும்பங்காற்றின. மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில வேக்சின்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலை  தடுக்கும் வகையில், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள இன்கோவாக் (INCOVACC) எனப்படும் மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்துக்கு மத்தியஅரசு அவசர கால அனுமதியை ஏற்கனவே  வழங்கி உள்ளது.

இந்த நிலையில்,  தற்போது மூக்கு வழியாக செலுத்தும் பூஸ்டர் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மூக்கு வழியாக செலுத்தப்படும் மருந்து இன்று முதல் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.   இந்த தடுப்புமருந்து முதலில் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சீனா  அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனாவில் BF.7 என்ற உருமாறிய கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது கடந்த ஒரு வாரத்தில் 1.48 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் சீனாவில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவிலும்,  தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளன. வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்தில் பரிசோதிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குபடியும் அறிவுரை கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், புதிய வகை கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு தேவைப்படாது என  கூறியுள்ள மருத்துவ நிபுணர்கள் தடுப்பூசி எடுக்காதவர்களே பாதிப்புக்குள்ளாக நேரிடும் என்றும், தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் பயப்படத் தேவையில்லை என்றும்  தெரிவித்து உள்ளானர்.

இந்த நிலையில்,   பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான, iNCOVACC® சமீபத்தில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கான அவசரகால சூழ்நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டின் கீழ் பன்முகத்தன்மை கொண்ட பூஸ்டர் டோஸ்களுக்கு  ஏற்கனவே ஒப்புதல் பெற்றது. இந்த நிலையில், அதை பூஸ்டர் டோசாக உபயோகப்படுத்த மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது.

மூக்குவழி செலுத்தும் கொரோனா மருந்தை இதுவரை எந்தவொரு நாடும் தயாரிக்காத நிலையில், இந்தியஅரசு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் முதன்முதலாக கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது.

உலகின் முதல் நாசல் தடுப்பூசி: பாரத் பயோடெக் தயாரித்துள்ள மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்தியஅரசு அனுமதி!