சென்னை:
கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும், மே மாதத்திற்கான இலவச ரேசன் பொருட்கள் வாங்க ஏதுவாக வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வருவதால், ஊரடங்கு மே 3ந்தேதி வரை எந்தவித தளர்வும் இன்றி நீட்டிக்கப்பட்டு உளளது. இதையடுத்து, மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ரேசன் கடையில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், மே மாதத்திற்கான இலவச ரேசன் பொருட்களை பெற வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்களை வாங்க ஏதுவாக வரும் 24, 25 ஆகிய தேதிகளில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும்.
ரேசன் பொருள் வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை டோக்கன்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர் டோக்கனில் உள்ள நாள், நேரத்தில் ரேசனுக்கு சென்று பொருள் பெறலாம். சமூக இடைவெளி நடைமுறையை கடைப்பிடித்து மக்கள் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு தமிழகஅரசு தெரிவித்து உள்ளது.