
சென்னை :
விஷால் அறிவித்தபடி, வரும் மே 30ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடமுடியாது என்று தமிழ்நாடு திரையரங்க சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 
திரைப்பட அதிபர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மே 30ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும். அப்போது, படப்பிடிப்புகள் நடைபெறாது; தியேட்டர்கள் மூடப்படும் என்றும் நடிகர் சங்கம் மற்றும தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவித்தார்.

ஆனால் இதற்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் இதை மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் திரையரங்குகள் ஈடுபடாது என்றும் தொடர்ந்து இயங்கும் என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel