சென்னை: தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு களியக்காவிளை காவல்ஆய்வாளரை கொலை செய்த பயங்கரவாத குழுவைச் சேர்ந்த கும்பலே பெங்களூர் ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பையும் நடத்தி உள்ளது என என்ஐஏ பரபரப்பு தகவல்களை தெரிவித்து உள்ளது.
எஸ்எஸ்ஐ கொலை வழக்கில் 7 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது களியக்காவிளை காவல் நிலையத்தைச் சேர்ந்த வில்சன், கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் பணியில் இருந்தபோது, அடிப்படைவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களே, பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பிலும் சம்பந்தப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 9ந்தேதி அன்று இரவு கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே படந்தாலுமூட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் துணைக் கண்காணிப்பாளர் வில்சன், சிலரை சோதனையிட முயன்றபோது, அவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இநத் சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ விசாரித்து வருகிறது. அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் திருவிதம்கோட்டைச் சேர்ந்த அப்துல் ஷமீம் மற்றும் தௌபீக், மேலும் சிலருடன் கைது செய்யப்பட்டு, படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் எஸ்எஸ்ஐ வில்சனை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. வாகன சோதனைகள். கர்நாடக மாநிலம் உடுப்பியில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், 2024 மார்ச் மாதம் 1ந்தேதி பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் 10 நொடிகள் இடைவெளியில் 2 குண்டுகள் வெடித்து பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு விசாரணையும் என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு வழக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் உள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ. கொலை வழக்கில் கைதானவர்களும், ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்களும் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள் என தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
2020ல் களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்தான் ராமேஷ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே சிறையில் உள்ள பயங்கரவாதி முகமது பாஷா தொடங்கிய ஆல் ஹிந்து டிரஸ்ட் என்ற அமைப்பின் கீழ் அனைவரும் ஒன்று கூடி சதித்திட்டங்கள் தீ்ட்டி உள்ளனர். இதற்கான இடம், தமிழ்நாடு – கர்நாடக வனப்பகுதிகளில் தேர்வு செய்யப்பட்டு, அங்கு கூடி ஆலோசனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். டார்க் வெப் மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு பேசிவந்ததையும் தேசிய புலனாய்வு முகமை கண்டறிந்து உறுதி செய்துள்ளது.
இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை உட்பட பல பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்ட ஐஎஸ் ஆதரவு பயங்கரவாதி காஜா மைதீனுக்கும் இந்த சம்பவங்களில் தொடர்பு உள்ளது. ஐஎஸ் ஆதரவு பயங்கரவாதி காஜாமைதீனும் இவர்களுடன் இணைந்து பல்வேறு சதி திட்டங்களை தீட்டியுள்ளார் என்று தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.