சென்னை:

8 வழி சாலை தடையை எதிர்த்து தமிழகஅரசு மேல்முறையீடு செய்யும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி உள்ளார். இது 5 மாவட்ட மக்களிடையே அதிமுக மீதான அதிருப்தியை மேலும் அதிகரித்து உள்ளது.

அதுபோல பாஜக தேசிய செயலாளர் இல.கணேசனும்,  உயர்நீதி மன்ற உத்தரவு தற்காலிக தடைதான் என்று தெரிவித்து உள்ளார்.

இல.கணேசன்,                            –             ராஜேந்திர பாலாஜி

சென்னை  முதல் சேலம்யே 8 வழி சாலை அமைக்க மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டன. இதற்கான நிலம் கையப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதையடுத்து விவசாயிகளிடம் இருந்து வலுக்கட்டாயமாக நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அரசின் அத்துமீறலை எதிர்த்து அரசியல் கட்சிகள், விவசாயிகள், பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

அரசின் உத்தரவை எதிர்த்து பாமக அன்புமணி, திமுக உள்பட பலர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

நிலம் கையகப்படுத்த தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணை ரத்து செய்த நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தையும் பதிவு செய்து. மேலும்,  சுற்றுச்சூழல் மற்றும் மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி, சுற்றுச்சூழல்துறையிடம் தடையில்லா சான்று உரிய முறையில் பெற வேண்டும்  திட்டம் தொடர்பாக மக்களிடம் உரிய முறையில் கருத்து கேட்கவில்லை என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்து உள்ளார்.

அதுபோல, பாஜக தேசிய   செயலாளரான இல.கணேசனும், இது தற்காலிக  தடங்கல் என பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.