சென்னை:
கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னையில் முடங்கி உள்ள வெளிமாநில தொழிலாளர்களி டம் கடுமைக்காட்டக்கூடாது, அவர்கள் சொந்த ஊருக்கு திருப்பிச் செல்ல அனைத்து ஏற்பாடு களையும் தமிழகஅரசு செய்து தர வேண்டும் என்று புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
மேலும், சென்னை குடிமக்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான கோவிட் நிதி தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக முதலில் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா தீவிரம் குறையாகத நிலையில் ஊரடங்கு மேலும் மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஊரடங்கால், அனைத்து வகையான போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்து வேலை செய்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.
சென்னையில் சிக்கி தவித்து வரும் ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சென்ட்ரல் மற்றும் அருகே உள்ள பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதல், அவர்கள், உண்ண உணவும் இன்றி, தங்கும் இடத்திற்கான வாடகை செலுத்த முடியாத நிலையிலும் திண்டாடி வருகின்றன.
பல இடங்களில் உண்ண உணவு இன்றி கஷ்டப்படும் அவர்களுக்கு சென்னை கார்பரேஷன், ஒவ்வொரு விடுதியாக சென்று, லாட்ஜ் உரிமையாளர்கள் வாடகை கேட்கவோ, புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் இருந்து வாடகை பெறுவதற்கு அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடவோ கூடாது என்று வலியுறுத்த வேண்டும்.
இந்த மக்களிடம் தங்கள் ஊருக்கு திரும்பி செல்ல கூட பணமில்லை என்ற நிலையில், அரசு லாட்ஜ் உரிமையாளர்களுக்கு வாடகைக்கான நிவாரணம் வழங்குவது மட்டும் போதாது. இந்த மக்கள் ஊர்களுக்கு திரும்பி செல்வதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.
ஊரடங்களில் மீதியிருக்கும் நாட்களுக்கு, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சுகாதாரமாக, வாழக்கூடிய இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும். அவர்கள் வாடகைக்கு வலுக்கட்டாயமாக செலவிட நேர்ந்த பணமும் திரும்பி கொடுக்கப்பட வேண்டும் என்று புலம்பெயர் தொழிலாளர்களுக்கான அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
மேலும் விவரங்களுக்கு: புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சென்னை குடி மக்களின் கோவிட் நிதி அமைபினரை தொடர்பு கொள்ளலாம்.
வெங்கட்: 73587 00655, 8939676237
ஷீலா மனோகர் : 9444689572
நித்யானந்த் ஜெயராமன் : 9444689572