சென்னை: தமிழ்நாடு அரசு மத்தியஅரசுடன் இணைந்து இரண்டு வானிலை ரேடார்களை நிறுவ முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்திய வானிலை மையம் உடன் இணைந்து, ஏற்காடு மற்றும் ராமநாதபுரத்தில் ரேடார்களை நிறுவ உள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தின்போது, மத்திய, மாநில அரசுகளின் வானிலை அறிக்கை முறையாக கிடைக்காத நிலையில், பேரழிவை சந்தித்து வருகிறது. இதனால், தமிழ்நாடு அரசு தனியாக வானிலை ஆய்வு மையம் நிறுவும் என முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தார்.  அதன்படி தற்போது, மத்திய அரசின் வானிலை ஆய்வு மையத்துடன் இணைந்து ரேடார்களை அமைக்க  உள்ளது. வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்தும்  இரண்டு டாப்ளர் வானிலை ரேடார்களை  ஏற்காடு மற்றும் இராமநாதபுரத்தில் அமைக்க உள்ளது.

தமிழ்நாடு அரசு ரூ.32.48 கோடி மதிப்பீட்டில் 1400 தானியங்கி மழைமானி (ARG) மற்றும் 100 தானியங்கி வானிலை நிலையம் (AWS) அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  தானியங்கி மழைமானி / தானியங்கி வானிலை நிலையத்திலிருந்து பெறப்படும் மழைபொழிவின் தரவுகளின் அடிப்படையில் அணைகளின் நீர்வரத்தை மதிப்பிட முடியும். இது பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும். அதிக மழைப்பொழிவு காரணமாக ஏற்படும் பயிர் சேதங்களை துல்லியமாக மதிப்பிடவும், நதிப் படுகை வாரியாகவும், விவசாய காலநிலை மண்டல அடிப்படையிலும் மற்றும் வரையறுக்கப்பட்ட பகுதிகளுக்கும் குறிப்பிட்ட வானிலை எச்சரிக்கைகள் மற்றும் முன்னறிவிப்புகளை அளிக்க இயலும்.

அதுேபால,  வானிலை முன்னறிவிப்பின் துல்லியத்தை மேம்படுத்த, இரண்டு சி-பேண்ட் டாப்ளர் வானிலை ரேடார்கள், வானிலை பலூன்கள் மற்றும் சூப்பர் கம்ப்யூட்டர் நிறுவுதல் ஆகிய பணிகளுக்காக ரூ.56.03 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேற்கண்ட ரேடார்களை இராமநாதபுரம் மற்றும் ஏற்காட்டில் நிறுவ முடிவு செய்யப்பட்டு, ரேடார்களை கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் தமிழ்நாடு அரசு,  அகமதாபாத் விண்வெளி பயன்பாட்டு மையத்துடனும்,  புனேயில் உள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி,  மிகத் துல்லியமான மீசோ அளவிலான வானிலை முன்னறிவிப்பு மற்றும் அறிவுப் பகிர்வை உருவாக்க, அகமதாபாத்தில் அமைந்துள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்தின் கட்டுபாட்டில் உள்ள உயர் ஆற்றல் கணினி வசதியைப் பயன்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ேமலு்ம,  தேவையான இடங்களில் பொதுமக்களுக்கு மின்னல் தொடர்பான எச்சரிக்கைகளை அனுப்புவதற்காக, புனேயில் உள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தற்போது இந்திய வானிலை ஆய்வு மையத்துடன் இணைந்து ஏற்காடு மற்றும் ராமநாதபுரத்தில் இரு டாப்ளடர் ரேடார்களை நிறுவ முடிவு செய்துள்ளது.  பருவமழை காலங்களிலும், பேரழிவு காலங்களிலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்வ கையில்,  தமிழக அரசு, IMD உடன் இணைந்து, ஏற்காடு மற்றும் ராமநாதபுரத்தில் இரண்டு டாப்ளர் வானிலை ரேடார்களை நிறுவுவதன் மூலம் வானிலை முன்னறிவிக்கும் திறனை மேம்படுத்த உள்ளது.

இந்த ரேடார்களை நிறுவுதல், சோதனை செய்தல், ஆணையிடுதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றுக்கான டெண்டர்களை TN பேரிடர் அபாயக் குறைப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய நிறுவல்கள் சென்னை, காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவில் தற்போதுள்ள ரேடார்களை எட்டாத பகுதிகளுக்கு விரிவடைந்து, மாநிலத்தின் பேரிடர் முன்னெச்சரிக்கை முயற்சிகளை வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் வருகிற அக்டோபர் 20-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்துள்ள நிலையில்,  ரேடார்களை நிறுவும் பணியில் தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டி வருகிறது.

பருவ நிலைகளை முன்கூட்டியே கண்காணிக்கும் வகையில் ஏற்கனவே சென்னை, காரைக்கால், ஸ்ரீஹரிகோட்டா ஆகிய இடங்களில் அதிநவீன ரேடார்கள் நிறுவப்பட்டு பருவ, காலநிலைகளை முன்கூட்டியே இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து வருகிறது.  ஆனாலும் சில சமயங்களில் இந்திய வானிலை ஆய்வு மைய கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் கனமழை மற்றும் புயல் காரணமாக அதிக பாதிப்புகளை தென் மற்றும் வட மேற்கு மாவட்டங்கள் சந்தித்து வருகின்றன.

கடந்த ஆண்டு தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டது ஆனாலும் இது தொடர்பாக இந்திய மாநில மையம் சரியான முன்னெச்சரிக்கை உத்தரவுகளை மாநில அரசுக்கு தெரிவிக்கவில்லை என்ற புகாரும் எழுந்தது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் தெற்கு மற்றும் வட மேற்கு பகுதிகளை இயற்கை சீற்றத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் பருவ காலநிலைகளை முன்கூட்டியே துல்லியமாக கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வசதியாக ராமநாதபுரம், ஏற்காடு ஆகிய 2 இடங்களில் அதிநவீன டாப்ளர் ரேடார்களை அமைக்க மாநில பேரிடர் மேலாண்மை துறை நடவடிக்கையில் இறங்கி உள்ளது .

தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு நிறுவனம் இந்த ரேடார்களை நிறுவுதல், சோதனை செய்தல், ஆணையிடுதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றுக்கான டெண்டர்களை வெளியிட்டுள்ளது.

இந்த அதிநவீன ரேடார்கள் மின்காந்த அலைகள் மூலம் பருவ, காலநிலையில் நிலவும் திட மற்றும் திரவ மூலக்கூறுகளின் தன்மைகளை துல்லியமாக ஆராய்ந்து மழை மற்றும் புயலின் தன்மையை முன் கூட்டியே துல்லியமாக கணிக்க முடியும். மேலும் இந்த ரேடார்கள் புயல் மற்றும் கடலில் உருவாகும் குறைந்த அழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயல் மையம் கொள்ளும் பகுதிகள், கடக்கும் பகுதிகளையும் துல்லியமாக கணித்து எச்சரிக்கை செய்யும்.

இந்த புதிய நிறுவல்கள் சென்னை, காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவில் தற்போதுள்ள ரேடார்களை எட்டாத பகுதிகளுக்கு விரிவடைந்து, மாநிலத்தின் பேரிடர் முன்னெச்சரிக்கை முயற்சிகளை வலுப்படுத்தும்.  இன்னும் துல்லியமான குறுகிய தூர முன்னறிவிப்பை வழங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.