புதுடெல்லி:
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தம்மை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் தன்னை விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடைந்து தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் தமிழக அரசு, மத்திய அரசு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்திருந்தது.

பேரறிவாளன் விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக வாதங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது.