ஐபிஎல் 2022: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி வெற்றி

Must read

மும்பை:
பிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் ராகுல் திரிபாதி அதிகபட்சமாக 76 ரன்கள் அடித்தார். மும்பை பந்து வீச்சாளர்களின் ராமன் தீப் சிங் 3 விக்கெட்டை வீழ்த்தினர்.

194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 190 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி, பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்து கொண்டது.

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் கொல்கத்தா – லக்னோ அணிகள் மோத உள்ளன.

More articles

Latest article