சென்னை :
அ.தி.மு.க., ஆட்சியை, கோட்டையை விட்டு வெளியேற்றும் ஜனநாயகப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.
‘கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க., சார்பில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடந்த முப்பெரும் விழாவில், ஸ்டாலின் பேசியதாவது:
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது, விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும். அந்த விசாரணைக் கமிஷனில் முதல் ஆளாக, அமைச்சர் விஜயபாஸ்கரை விசாரிக்க வேண்டும்’ என, சொன்னவர் பன்னீர்செல்வம். அவரே விசாரணை கமிஷனுக்கு போகவில்லை.
அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், ‘பன்னீர்செல்வம் தன் மீதான ஊழல் புகார்களுக்கு பதில் சொல்ல வேண்டும். சேகர் ரெட்டியை அறிமுகப்படுத்தியதே பன்னீர்செல்வம்தான். ஜெயலலிதா சிறையில் இருக்கும் போது, சேகர்ரெட்டிக்கு பதவி போட்டு கொடுத்தது பன்னீர்செல்வம் தான்’ என்றார்.
இப்படிப்பட்ட ஆட்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். இன்று நடப்பது ஆட்சியல்ல; வீழச்சி. இந்த வேதனை ஆட்சி விரைவில் முடிவுக்கு வர வேண்டும். இந்த வீழ்ச்சி விரைந்து தடுக்கப்பட வேண்டும்.கோட்டையை விட்டு வெளியேற்றும் ஜனநாயகப் போராட்டத்தை, தொடர்ந்து முன்னெடுப்போம்.
இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.