சிஏஏ-க்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

Must read

சென்னை: 

கொரோனா வைரஸ் காரணமாக சிஏஏக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடத்திய போராட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 14-ம் தேதி முதல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய மக்கள் போராடி வந்தனர். இந்த நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடாில் கேரளா, புதுச்சோி மாநிலங்களைப் போன்று குடியுாிமை சட்டத் திருத்தம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டசபையிலும் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றுவரும் ஷாஹின் பாக் தொடர் போராட்டத்தின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வண்ணாரப்பேட்டைக்கு வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில் கொரோனா வைரஸை மனதில் கொண்டு, போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக இஸ்லாமிய கூட்டமைப்பினர் முன்னதாக தெரிவித்திருந்தனர். ஆனால், அவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக கூறியதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற வண்ணாரப்பேட்டை இஸ்லாமியர்கள், போராட்டத்தை தொடர்வதாக கூறி இருந்தனர். சட்டப்பேரவையில் சட்டம் இயற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றும் போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜமாத் கூட்டமைப்பினர் கூறி இருந்தார்.

இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிஏஏ, என்பிஆர்-ஐ எதிர்த்து தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் நடத்தி வரும் போராட்டங்களும் ஒத்திவைக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் போராட்டத்தை ஒத்திவைப்பதாக கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article