சென்னை: ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் தமிழக வீரர்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என அமைச்சர் மெய்யநாதன் அறிவித்து உள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டிகள் ஜூலை 31 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 ஆம் தேதி நிறைவு பெறுகின்றன. இந்தப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கும் தடகள வீரர்கள் 26 பேர் பட்டியலை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்து உள்ளது.
இந்த பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 3 வீராங்கனைகள், இரண்டு வீரர் உள்பட 5 பேர் இடம்பெற்றுள்ளனர். தடகள வீராங்கனைகளான ரேவதி, தனலட்சுமி, சுபா வெங்கடேசன் மற்றும் வீரர் ஆரோக்கிய ராஜீவ், நாகராஜா பாண்டி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டியில் கலந்துகொள்ள தமிழகத்தில் 5 வீரர்கள் தேர்வு… வாழ்த்துக்கள்…