டில்லி,

விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியிலும், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய போராடினர். அதையடுத்து, அவர்கள் மீதான விவசாய கடனை தள்ளுபடி செய்ய புதுச்சேரி அரசு முடிவு செய்தது. அதன்படி கோப்பு தயார் செய்து புதுச்சேரி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

ஆனால், ஆளுநர் கிரண்பேடி அதற்கு ஒப்புதல் தர மறுத்துவிட்டார். அந்த கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.  இதையடுத்து,  புதுச்சேரி அரசு சார்பில் மத்திய அரசிடம் கவர்னரின் அத்துமீறல் குறித்து  புகார் கூறப்பட்டது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளது.அதில், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மத்திய அரசின் இந்த உத்தரவு காரணமாக காரணமாக கவர்னரின் அத்துமீறிய செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.