சென்னை:

மிழகத்தில் விமானங்களை தரையிறக்க மாநிலஅரசு அனுமதிக்கவில்லை, அதனால்தான் வந்தே பாரத் மிஷன் விமானத்தை இயக்க முடியவில்லை என்று நீதிமன்றத்தில் மத்தியஅரசு தகவல் தெரிவித்து உள்ளார்.

திமுக சார்பில், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர விமானங்களை இயக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில்,  மத்திய அரசின் அனுமதியைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளி லிருந்து அனைத்து மாநிலங்களுக்கும் விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழக அரசு விமானப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கவில்லை.

மத்திய அரசின் உத்தரவை மீறும் வகையில் தமிழக அரசு விமானங்களை இயக்க தடை விதித்து உள்ளது. இதனால், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உணவு, தங்குமிடம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் கடந்த 2 மாதங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வரும் வகையில் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அமர்வு காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். விசாரணைக்கு ஆஜன மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் அந்த விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு அனுமதி மறுக்கிறது என்றார்.

மேலும், வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், ஐதராபாத், பெங்களூருவில் இறங்கி தமிழகம் வருகின்றனர். எனவே விமானங்களைத் தரையிறக்க அனுமதி மறுப்பது ஏன் என்பது தொடர்பாகத் தமிழக அரசு தான் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, முக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 27 ஆயிரம் பேர் எப்போது அழைத்து வரப்படுவார்கள் எனக் கேள்வி எழுப்பினார்.

அதைத்தொடர்ந்து ஆஜரான தமிழகஅரசின்    தலைமை வழக்குரைஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஏராளமானோர் தமிழகம் திரும்பியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் விமானங்கள் தரையிறங்க அனுமதியளித்தது தொடர்பான கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (ஜூன் 30) ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.