சென்னை,

னியார் தொலைக்காட்சியில் வெளியாகி வரும் பிக்பாஸ் குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் கமலஹாசன் நேற்று பதில் அளித்தார். அப்போது தமிழக அரசில் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில்அளித்த தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார், நிகழ்ச்சி பிரபலமடைய அரசு மீது கமலஹாசன் சேற்று வாரி வீசுகிறார் என்று கண்டனம் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.

இந்த நிகழ்ச்சி கலாச்சாரத்தை சீரழிப்பதாகவும், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமலஹாசனை கைது செய்ய வேண்டும் எனவும் இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, நடிகர் கமல்ஹாசன்  செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அப்போது, தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாக பகிரங்கமாக  கூறினார்.

தாம் ஒரு வடத்திற்கு முன்பே சிஸ்டம் சரியில்லை என்று கூறிதாகவும்,  அதனை தற்போது ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வழிமொழிகிறார்கள் என்றும் கூறினார்.

இதுகுறித்த கேள்விகளுக்கு பதிலளித்த தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார், தான் நடத்தும் நிகழ்ச்சி பிரபலமடைய தமிழக அரசின் மீது சேற்றை வாரி வீசுகிறார்  என்று நடிகர் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், சிஸ்டம் சரியில்லை என்பதன் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டமே சரியில்லை என கமல் சொல்ல வருகிறாரா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பிக்பாஸ் தற்போது சர்ச்சை பாஸ் ஆக மாறி வருகிறது.