ரஃபேல் ஊழல் பற்றிய புத்தகங்களை பறிமுதல் செய்தது ஜனநாயக விரோதம்: ‘இந்து’ ராம்

Must read

சென்னை:

ன்று வெளியிடப்பட இருந்த  “நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்”  என்ற புத்தகம் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும், அந்த புத்தகங்களையும் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுள்ளது.

இது கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்றும்,  புத்தகங்களை பறிமுதல் செய்தது ஜனநாயக விரோத, சட்டவிரோத நடவடிக்கை என்று இந்து என்.ராம் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மோடியில் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் முறைகேடு நடைபெற்றதை சமீபத்தில் இந்த பத்திரிகை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. ரஃபேல் ஊழல் வழக்கு மீதான மறுசீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் புதிதாக தாக்கல் செய்யயப்பட்டு இருக்கும் ஆவணங்கள் பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது.

இநத் நிலையில், இன்று வெளியாக இருந்த ”நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” புத்தக வெளியீட்டு விழாவிற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து இருக்கிறது. இந்த புத்தகத்தை இந்து என்.ராம் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தடை விதிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை இந்து ராம் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

More articles

Latest article