வாணியம்பாடி:

வாணியம்பாடியில் சூறை காற்றுடன் மழை பெய்தது. அப்போது அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த தமிழக அரசு பேருந்தின் மேற்கூரை, காற்றினால் தனியாக பறந்து சென்றது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சமீபத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தபோது, “தற்போது இயங்கிக்காண்டிருக்கும் மூன்றில் ஒரு பங்கு அரசு பேருந்துகள், காலாவதியானவை.

இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உண்டு” என்று ஊழியர் சங்கங்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]