டெல்லி: இணையசேவை இல்லாமல் UPI லைட் மூலம் பணப்பறிமாற்றம் செய்வதற்கான அதிகபட்ச தொகையை 200 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக அதிகரிப்பதாகவும் (Near Field Communication மூலம் பணப்பறிமாற்றம்) , வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை; 6.5% விகிதமே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தலைமையில் ரிசவ் வங்கி ஆளுநர்கள் கூட்டம் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இந்தியாவில் உள்ள வங்கிகளின் கையிருப்பில் போதிய அளவு பணம் இல்லையென்றால் மத்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து கடனாக பணத்தை பெறலாம். இதற்காக அவ்வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு (Reserve Bank of India) அளிக்க வேண்டிய வட்டி விகிதம் நாட்டின் பொருளாதார சூழ்நிலை உட்பட பல காரணிகளை கொண்டு தீர்மானிக்க படுக்கிறது. இதனை ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கமிட்டியின் (Monetary Policy Committee) வல்லுனர்கள் முடிவெடுத்து ஆர்பிஐ-க்கு பரிந்துரை செய்வார்கள்.
ஆறு உறுப்பினர்களை கொண்ட இந்த கமிட்டியின் சந்திப்பு ஆகஸ்ட் 8 முதல் 10 வரை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் பரிந்துரையின்படி ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை (Repo rate) எந்த மாற்றமுமில்லாமல் 6.5 சதவீதத்திலேயே வைத்துள்ளது. சில்லறை பணவீக்கத்தை 4 சதவீத அளவிலேயே வைத்து கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸ், UPI லைட்டின் பரிவர்த்தனை வரம்பை ரூ. 200ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தியுள்ளது மற்றும் ஆகஸ்ட் மாதம் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்தார். மேலும், SDF விகிதம் 6.25 சதவீதம், MSF விகிதம் 6.75 சதவீதம், CRR விகிதம் 4.5 சதவீதமாக தொடரும் என்றும் தெரிவித்து உள்ளார். நாட்டின் பணவீக்கம் பாதிக்கப்பட்டு உள்ளதால் ரெப்போ விகிதம் குறைப்பு அடுத்த ஜூன் காலாண்டு வரையில் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய ஆர்பிஐ கூட்டத்தில் ரெப்போ விகித்தை உயர்த்தினால், வீட்டுக் கடன், வாகன கடன், நகை கடன், பர்சனல் லோன் என அனைத்து கடனுக்கான வட்டி விகதம் உயர்ந்து மக்கள் வாங்கிய கடனுக்கான ஈஎம்ஐ அதிகரிக்கும் என்று அச்சத்துடன் இருந்த நிலையில், ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை , ரெப்போ விகிதம் 6.50 சதவீதம் தொடரும் என கூறியிருப்பது சற்றே நிம்மதியை தந்துள்ளது.இதனால் மக்கள் வாங்கிய கடனுக்கான ஈஎம்ஐ-யில் எவ்விதமான மாற்றமும் இருக்காது.
2024 ஆம் நிதியாண்டின் சில்லறை விலை பணவீக்கம் கணிப்பு 5.1% சதவீதத்தில் இருந்து 5.4 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது
அதைத்தொடர்ந்து, அடுத்த 4 காலாண்டின் சில்லறை விலை பணவீக்கம் அளவுகளையும் ஆர்பிஐ வெளியிட்டு உள்ளது
. அதன்படி, 2024 ஆம் நிதியாண்டு 2வது காலாண்டில் 6.2% முன்பு கணிக்கப்பட்ட அளவு 5.2%,
2024 ஆம் நிதியாண்டு 3வது காலாண்டில் 5.7% முன்பு கணிக்கப்பட்ட அளவு 5.4%,
2024 ஆம் நிதியாண்டு 4வது காலாண்டில் 5.2% முன்பு கணிக்கப்பட்ட அளவு 5.2%,
2025 ஆம் நிதியாண்டு முதல் காலாண்டில் 5.2%.
2024 ஆம் நிதியாண்டின் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 6.5 சதவீதத்தில் மாற்றமில்லை என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
2024 ஆம் நிதியாண்டு முதல் காலாண்டில் 8% முன்பு கணிக்கப்பட்ட அளவு 7.8%,
2024 ஆம் நிதியாண்டு 2வது காலாண்டில் 6.5% முன்பு கணிக்கப்பட்ட அளவு 6.2%,
2024 ஆம் நிதியாண்டு 3வது காலாண்டில் 6% முன்பு கணிக்கப்பட்ட அளவு 6.1%,
2024 ஆம் நிதியாண்டு 4வது காலாண்டில் 5.7% முன்பு கணிக்கப்பட்ட அளவு 5.9%,
2025 ஆம் நிதியாண்டு முதல் காலாண்டில் 6.6%.
விவசாய கடன்களில் உயர்வு வளர்ச்சியை குறிக்கிறது. தொழில்துறையின் வளர்ச்சி நிலையாக உள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தின் வேகம் நம்பிக்கையூட்டும் விதமாக உள்ளது. பிற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா பொருளாதார சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வருகிறது.
உலகளவில் பிற நாடுகளின் மத்திய வங்கிகள் உயர்த்தியுள்ள வட்டி விகிதங்கள் இன்னும் சில காலங்கள் தொடர்ந்து உயர்விலேயே இருக்கும். ஆனால், உலகளவில் வளர்ச்சி என்பது குறைவதற்கான ஆபத்தும் அதிகம். பணவீக்கத்தின் போக்கை கூர்மையாக கவனித்து திட்டங்களை வகுக்க வேண்டும். முன்னர் அதிகரித்திருந்த ரெப்போ வட்டி விகிதத்தின் தாக்கம் இப்போது பொருளாதாரத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த துவங்கியுள்ளது. உலகின் வளர்ச்சிக்கான இயந்திரமாக இந்தியா விரைவில் மாறும். உலகின் பொருளாதார வளர்ச்சியில் 15 சதவீதம் இந்தியா வழங்குகிறது.
இவ்வாறு கூறினார்.