சென்னை:  ராகுல் காந்திக்கு பாஜக உள்பட  பல மட்டங்களில் இருந்து பகிரங்க மிரட்டல் வந்துள்ள நிலையில்,  நமது ஜனநாயக நாட்டில் வன்முறைக்கு இடமில்லை என்று கூறியிருப்பதுடன், இந்த மிரட்டல் போக்கிற்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சமீப காலமாக ராகுல்காந்தியின் பேச்சு சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. பிரதமர் மோடியையும், இந்தியாவையும் தரக்குறைவாக பேசி வருவதாக அவர்மீது குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அமெரிக்காவில் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் மற்றும் அவர் சந்தித்த நபர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இந்தியாவுக்கு எதிரான மனநிலையில் உள்ளவர்களை ராகுல் சந்தித்து பேசிவருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.

மேலும்,  அமெரிக்க பல்கலைக் கழக மாணவர்களுடன் உரையாடல்  நடத்தினார். அப்போது இந்திய   பிரதமர் நரேந்திரமோடியையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அப்போரது,  சீக்கியர்கள் குறித்து அவர் கூறிய உண்மைக்கு புறம்பான தகவல் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. அதுபோல,   செய்தியாளர் சந்திப்பில், இண்டி கூட்டணி குறித்த கேள்விக்கு முறையான பதில் தெரிவிக்காமல் சொதப்பியதும் கடுமையான விமர்சனங்களை எழுப்பியது. இதனால் ராகுலை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  நாட்டி காட்டிக்கொடுக்கும் தேசத்துரோகி என அவரை பாஜக உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். உச்ச பட்சமாக, ராகுலின் நாக்கை அறுப்பவர்களுக்கு பரிசு வழங்குவதாக மகாராஷ்டிரா மாநில சிவசேனை தலைவர் மிரட்டல் விடுத்தார். அதுபோல பாஜக ஆதரவு சீக்கிய அமைப்பினர், இந்திராகாந்திக்கு ஏற்பட்ட நிகழ்வுதான் ராகுலுக்கும் நேரும் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது நாடு முழுவதும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தமிழ்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், . ஜனநாயக நாட்டில் மிரட்டல், வன்முறைக்கு இடமில்லை என்பதை மீண்டும் உறுதிசெய்ய வேண்டும் என  வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ராகுல் காந்திக்கு,  பாஜக தலைவர் ஒருவரின் மிரட்டல் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன/அவரது பாட்டிக்கு நேர்ந்த கதியை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும்,  மற்றும் ஷிண்டே சேனா எம்.எல்.ஏ. ராகுலின் நாக்கை அறுப்பேன் என்று மிரட்டி உள்ளார்.

எனது சகோதரர் ராகுல் காந்தியின் கவர்ச்சியும், பெருகிவரும் மக்கள் ஆதரவும் பலரைத் தெளிவாக அமைதிப்படுத்தியுள்ளது, இது போன்ற மோசமான மிரட்டல் செயல்களுக்கு வழிவகுத்தது.

எதிர்க்கட்சித் தலைவருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு விரைந்து செயல்பட்டு, மிரட்டல் மற்றும் வன்முறைக்கு நமது ஜனநாயகத்தில் இடமில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு கூறி உள்ளார்.