சென்னை: நவம்பர் 11 முதல் 14 வரை  சென்னை உள்பட  வட தமிழகக் கடற்கரையில் கனமழை பெய்யும், அப்போது கனமழையின் ஹாட் ஸ்பாட்டாக சென்னை இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்.

இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 9ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு இசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்திருந்தது.  நவ.9 மற்றும் 11 தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டு பேஸ்புக் பதிவில், தமிழகத்தில்  அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலும் நிலவு (இரவு) நேரம் முதல் காலை வரை  மழை தொடரும், இவை வெறும் டிரெய்லர்கள் மட்டுமே, உண்மையான பரவலான நிகழ்வு நவம்பர் 11 முதல் 14 வரை மற்றும் மீண்டும் வட தமிழகக் கடற்கரையில் அனைத்து இடங்களிலும்  இருக்கும் என்று எச்சரிக்கை செய்துள்ளாளர்

இந்த நாட்களில்  சென்னை உட்பட பல இடங்கள் மழையின் ஹாட் ஸ்பாட்டில் இருக்கும். நவம்பர் 1 முதல் 4 வரை பெய்த மழையை விட இது பெரிய நிகழ்வாக இருக்கும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்.