டில்லி:

மாநிலங்களவை கூட்டத் தொடர் ஜூன் 20-ம் தேதி முதல் நடைபெற உள்ளதாக மாநிலங்களவை செயலகம் அறிவித்து உள்ளது.

17வது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்று புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், வரும் 17ந்தேதி மக்களவை கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது தற்காலிக சபாநாயகர் தலைமையில் புதிய மக்களவையின் உறுப்பினர்கள் பதவியேற்பு நடைபெறும். அதைத்தொடர்ந்து, 19ந்தேதி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது.

இதையடுத்து,வரும் 20-ஆம் தேதி மக்கள்வை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பங்கேற்கும் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார். இதற்காக, இம்மாதம் 20-ஆம் தேதி மாநிலங்களவை கூட்டத் தொடர் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது

. இந்த கூட்டத் தொடர் ஜூலை 26-ஆம் தேதி வரை 27 அமர்வுகளாக நடைபெறும் என்று மாநிலங்களவை செயலகம் தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]