மாலேகான்  குண்டுவெடிப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி போபால்வ எம்.பி. பிரக்யா சிங் வேண்டுகோள் விடுத்த நிலையில், அவரது கோரிக்கையை நிராகரித்த என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு  ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டது.

கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி மாலேகான் பகுதியில் ஒரு மசூதி அருகே இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த வெடி குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இளம்பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர், ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான  என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், போபால் தொகுதியில் போட்டியிட்ட பிரக்யாசிங் வேற்றி பெற்று எம்.பி.யாக உள்ளார். இதையடுத்து, தனக்கு வழக்கு விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரி, சிங் மனுத்தாக்கல் செய்தார். ‘

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிரக்யா சிங்கின் கோரிக்கையை நிராகரித்த என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து, விலக்கு அளிக்க முடியாது என உத்தரவிட்டார்.