சென்னை,
வருமானவரித்துறையினரின் அதிரடி ரெய்டில் சிக்கிய தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மனோகர் ராவுக்கும மீண்டும் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்த தமிழக முன்னாள் தலைமை செயலாளர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது அவருக்கு தொழிற்முனைவோர் மேம்பாட்டு திட்ட இயக்குநராக பதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது தலைமை செயலாராக நியமிக்கப்பட்டவர் ராம மோகனராவ். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் 27ந்தேதி அவருடைய வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள இவருடைய அறை, அவருடைய மகன் வீடு ஆகியவற்றில் மத்திய வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து அவர் தலைமை செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், தற்போது அவருக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு துறை இயக்குநர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை தொழில் முனைவோர் மேம்பாட்டு துறையின் முதன்மை செயலாளராக இருந்த ராஜாராம் நில நிர்வாக துறையின் முதன்மை செயல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமமோகன் ராவ் மீண்டும் பதவிக்கு வந்திருப்பது கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.