சென்னை: மூளையை தாக்கும் அமீபா குறித்து பொதுமக்கள்  அச்சப்படத் தேவையில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. அதுபோல பொது சுகாதாரத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில்,  மூளையை உண்ணும் அமீபாக்கள்  காரணமாக 15வயது  சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இந்த நோய் தொடர்பாக தகவல்கள் பரவி வருகின்றன.

இதனால், தேங்கி இருக்கும் நீரில் குளிப்பதைப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள், குளங்கள், ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு பொதுசுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

பொதுவாக புதிய வகையின் நோய்களின் பிறப்பிடமாக கேரள மாநிலம் திகழ்ந்து வருகிறது. ஏற்கனவே பெருந்தொற்றான கொரோனா நோயும் முதன்முதலாக கேரள பயணி ஒருவர் மூலம்தான் நாடு  முழுவதும் பரவத்தொடங்கியது. அதுபோல, பறவை காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என பல நோய்களின் பாதிப்பு கேரளாவில்தான அதிக அளவில் காணப்படுகிறது. இந்த நிலையில், தற்போது  மற்றொரு புதிய  நோய் ஆட்டுவித்து வருகிறது. அசுத்தமான நீரில் காணப்படும் அமீபாவால் ஏற்படும் அரிய வகை மூளைத் தொற்றான அமீபிக் மெனிங்கோ என்செபாலிட்டிஸுக்கு சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுவன், கடந்த சில நாள்களுக்கு முன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூளையை தின்னும் அமீபாவால் தாக்கப்பட்டு இதுவரை கேரள மாநிலத்தில்  3 பேர்  பலியாகி உள்ளதால், மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்தநோய் அண்டை மாநிலமான தமிழ்நாட்டிலும் பரவக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி நிர்வாகம்,  நிர்வாகம் மூளையை தாக்கும் அமீபாவால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையிலை தெளிவுபடுத்தியுள்ளது. இந்த நிலையில், மனித மூளையை தாக்கும் அமீபா குறித்து பதட்டமடைய வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அமீபா பரவாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை எடுத்துள்ளதாகவும், முக்கியமாக, நீச்சல் குளம் மூலம் இந்த அமீபா நுண்ணுயிரி பரவ வாய்ப்பு அதிகமாக இருப்பதால் அதற்கேற்ற சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும்  எழுதிய கடிதத்தில், தேங்கி இருக்கும் நீரில் குளிப்பதைப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள், குளங்கள், ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும். அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்னும் மூளையை தின்னும் நோய் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, குழப்பம், பிரமைகள் மற்றும் வலிப்பு போன்றவை இந்நோயின் அறிகுறிகள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.