
வேலூர்,
வேலூர் சிறையில் இருந்து கைதி சகாதேவன் தப்பி சென்றுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் உள்ள மத்திய சிறையில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில்தான் ராஜீவ் காந்தி கொலை கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வழக்கு ஒன்று காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சகாதேவன் என்ற கைதி சிறையில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
சிறையின் பின்புறம் உள்ள மரத்தில் லுங்கியைக் கட்டி சுவரில் ஏறித் தப்பிச் சென்று இருப்பதாக சிறைத்துறை போலீசார் கூறி உள்ளனர். அவரை பிடிக்க போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel