புதுடில்லி:
“பிரதமர் மோடி என்னை கொலை செய்துவிடுவாரோ என்று அச்சப்படுகிறேன்” என்று டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அச்சம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய கெஜ்ரிவால், “மத்திய பாஜக அரசு மீதும் மோடியின் நிர்வாகம் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் செய்துவருகிறேன். இதற்காக என்னை அவர் கொலையும் செய்துவிடுவாரோ என்று அச்சப்படுகிறேன்.

டில்லியில் ஆம்ஆத்மி பதவி ஏற்ற பிறகு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எங்களது எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அதேபோல பஞ்சாப், குஜராத் மற்றும் கோவாவில் ஆம் ஆத்மி கட்சி வளர்ந்து கொண்டிருப்பது பிரதமருக்கு பிடிக்கவில்லை
இதனால்தான் எங்களை மிரட்டுவதற்காக வருமானவரித் துறையினர் மூலம் சோதனை நடத்துகிறர்கள். டில்லி சட்டமன்றத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 21 பேரை தகுதி நீக்கம் செய்யவும் சதி நடக்கிறது” என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.
நாட்டின் பிரதமர் தன்னை கொலை செய்துவிடுவாரோ என்று அஞ்சுவதாக ஒரு மாநிலத்தின் முதல்வர் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
Patrikai.com official YouTube Channel