ஜம்மு-காஷ்மீர்:
பிரதமர் மோடி இன்று ஜம்மு-காஷ்மீருக்கு பயணமாக உள்ளார்.

தேசிய உள்ளாட்சி அமைப்பு தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, ஜம்மு-காஷ்மீருக்கு இன்று செல்கிறார். அங்கிருந்தபடி நாடு முழுவதிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் காணொலிக்காட்சி மூலம் காலை 11.30 மணியளவில் அவர் உரையாற்றவுள்ளதாகவும் பிரதமர் அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் பிராந்தியங்கள் இடையே பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் வகையில் 3,100 கோடி ரூபாய் மதிப்பிட்டில் நிறுவப்பட்ட பனிஹல் – காசிகுண்ட் சுரங்கப் பாதையைத் திறந்து வைக்கவுள்ளார். இதன்பின்னர், 20 ஆயிரம் கோடி ரூபாய மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.

அரசியல் சாசன பிரிவு 370-ஐ ரத்து செய்த பிறகு பிரதமர் ஜம்மு காஷ்மீர் செல்வது இதுவே முதல்முறையாகும்.