சென்னை:
மிழகத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பிரதமர் பாராட்டியுள்ளார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தியாகிகள் தினத்தை ஒட்டி, சென்னை கிண்டியிலுள்ள தியாகிகள் மணி மண்டபத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய பின் பேசிய அவர், தமிழகத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பிரதமர் பாராட்டியுள்ளார் என்றும், புதிதாக அமையும் 11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்குவது குறித்து மத்திய அரசு தமிழகம் வந்து ஆய்வு செய்யவிருப்பதாக கூறினார். போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பான ஓ.பன்னீர்செல்வம் அறிக்கைக்கு பதில் அளித்த அமைச்சர், கடந்த ஆட்சியில் போரூர் ஏரியை மூட முயற்சி நடந்ததாக குற்றம்சாட்டினார்.