சென்னை:
ரு யூனிட் ஆற்று மணலுக்கு அடிப்படை விலையாக ரூ. 1,000 நிர்ணயித்து தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆற்றுப் படுகைகளில் இருந்து ஆற்று மணலை எடுத்து நுகா்வோருக்கு விற்பனை செய்யும் பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்து ஆய்வு செய்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பில், பொது மக்கள் பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்தோருக்கு வழங்கியது போக, மீதமுள்ள மணலை பதிவு செய்த லாரி உரிமையாளா்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மணல் இருப்பைப் பொறுத்து வழங்கப்படும் என்றும் இப்போது 16 லாரி குவாரிகள் மற்றும் 21 மாட்டு வண்டி குவாரிகள் இயக்க சுற்றுச்சூழல் தடையின்மை பெறப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆற்று மணலுக்கான அடிப்படை விலையாக ரூ. 1,000 நிர்ணயித்து தமிழக அரசு இதுகுறித்த அரசாணையை வெளியிட்டுள்ளது. மேலும் மணல் விற்பனையில் முறைகேடு நடப்பதைத் தடுக்க சிசிடிவி கேமரா மூலமாக கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.