சென்னை,

ங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் மாவட்டங்க ளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறினார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் ,  ‘‘தென் மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. ‘

இது, நாளை(நவம்பர் 30) கன்னியாகுமரி அருகே மையம் கொண்டிருக்கும். இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.

ஒரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்’’ எனத் தெரிவித்துள்ளது.

இதனிடையே கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.