டில்லி:
காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக கர்நாடக அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், கர்நாடக அரசு மனுவை தள்ளுபடி செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி காவிரியில் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவை ஏற்க மறுத்தது கர்நாடகா. இதுகுறித்து மறுசீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்தது.
இன்று விசாரணைக்கு வந்த இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், குறிப்பிட்ட காலத்தை கடந்துவிட்டதால் கர்நாடகாவின் சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்வதாக கூறினர்.