வங்கி வாசலில் பழைய கிழிந்த ரூபாய் நோட்டு குவியல்

Must read

 

ஆத்தூர் :

சேலம் மாவட்டம் ஆத்தூரில், சேலம் மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி கிளை உள்ளது. இதன் வாசலில் பொடிப்பொடியாக கிழிக்கப்பட்ட நிலையில் பழைய ரூ.500, 1000 நோட்டுக்கள்  வீசப்பட்டுள்ளன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சுமார் 5 கிலோ எடையுள்ள இந்த பழைய நோட்டுக்களின் மதிப்பு 10 லட்சம் வரை இருக்கலாம்.

கூட்டுறவு வங்கி கிளை அருகிலேயே எஸ்பிஐ வங்கி கிளையும் உள்ளதால், வங்கியில் இருந்து  இந்த பழைய ரூபாய் நோட்டுக்கள் கிழித்து வீசப்பட்டுள்ளனவா அல்லது வேறு யாரும் வீசிச்சென்றனரா என்பது தெரியவில்லை.

 

More articles

Latest article