சென்னை,

திமுகவின் இரு அணிகளும் இன்று இணையும் என்றும், அதைத்தொடர்ந்து புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இரு அணிகளும் இணைவதற்கான வாய்ப்பு குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ் அணியினிர் மீண்டும் ஒரு கோரிக்கை வைத்துள்ளதாகவும், சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று இபிஎஸ் தரப்பினர் அறிவிக்க வேண்டும் என்றும் நிபந்தனை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக இரு அணிகளும் இணைவதில் சிக்கல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றால், ஆட்சி கலைய அதிக முகாந்திரம் உள்ளதாக கூறப்படுகிறது.

இன்று காலை முதல் இரு அணிகளும் இணையும் என்றும், எந்தவித நிபந்தனையும் இல்லை என்று இரு அணி தலைவர்களும் கூறி வந்த நிலையில், தற்போது ஓபிஎஸ் அணியினரின் நிபந்தனை மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஓபிஎஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ எஸ்.பி சண்முகநாதன் ஓபிஎஸ் கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.

அதே வேளையில் 16 சட்ட மன்ற உறுப்பினர்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது வீட்டில் ஆலோசனை செய்து வருகின்றனர். தனது ஆதரவு எம்எல்ஏக்களின் ஆதரவை வாபஸ் பெற வைத்து, ஆட்சியை கலைக்க முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் குவிந்துள்ள அதிமுக தொண்டர்களும், ஜெயலலிதா சமாதியில் குவிந்துவரும் அதிமுகவினரும் கடும் குழப்பத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.

இதன் காரணமாக இரு அணிகளும் இணையுமா அல்லது அதிமுக அரசு கலையுமா? என பொதுமக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.