சென்னை,

டந்த இரண்டு நாட்கள் போராட்டம் நடத்தி வந்த செவிலியர்கள் நேற்று அமைச்சர் விஜயபாஸ்க ருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

பேச்சு வார்த்தையின்போது, பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்பட செவிலியர்களின் 90சதவிகித கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

நேற்றைய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, செவிலியர்கள் போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால்,  பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அரசாணை வெளியிடப்படும் வரை போராட்டம் தொடரும் ஒரு குரூப் செவிலியர்கள் போராட்டத்தை தொடருவதாக அறிவித்தனர்.

இதன் காரணமாக செவிலியர்களுக்கிடையே பிளவு ஏற்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை அடுத்து,  செவிலியர்களில் சிலர் தலைமைச் செயலகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளை  நேற்று மாலை சந்தித்து சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அமைச்சரின் உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

ஆனால், கோரிக்கைகள் குறித்து அரசாணை வெளியிடப்படும் வரை தொடரும் என குரூப்  செவிலி யர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Also read

2 நாட்களாக நடைபெற்ற செவிலியர்கள் போராட்டம் வாபஸ்!

செவிலியர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்