ஸ்டாக்ஹோம் :

2017ம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்கரான ரிச்சர்டு எச்.தாலர்-க்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இயற்பியல், மருத்துவம், பொருளா தாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

2017ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்களின் விவரம் கடந்த ஒருவாரமாக  அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மருத்துவம், வேதியியல், இயற்பியல், இலக்கியம் ஆகியவற்றுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று  பொருளாதாரத்திற்கான  நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்கரான ரிச்சர்டு எச்.தாலர் க்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உளவியலுடன் பொருளாதாரத்தை ஒருங்கிணைத்தல் ஆராய்ச்சிக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ரிச்சார்ட் எச். டாலர் பொருளாதார முடிவெடுக்கும் பகுப்பாய்வுகளை ஆராய்வதில் மனோ ரீதியாக உண்மையான யதார்த்தங்களை தெரிவித்துள்ளார்.

வரையறுக்கப்பட்ட பகுத்தறிவு, சமூக முன்னுரிமைகள் மற்றும் சுய கட்டுப்பாடு இல்லாமை ஆகியவற்றின் விளைவுகளை ஆராய்வதன் மூலம், தனிப்பட்ட முடிவுகளையும், சந்தை விளைவுகளையும் எவ்வாறு பாதிக்கின்றது என்பது குறித்து உளவியலுடன பொருளாதாரத்தை ஒருங்கிணைப்பது குறித்து  அதற்கு மனோ ரீதியிலான உண்மையான யதார்த்தங்கள் குறித்து ஆராயச்சி செய்துள்ளார்.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.