டில்லி,
ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் வரும் 18ந்தேதி (நாளை மறுதினம்) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஜூன் 1ந்தேதி முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து விதமாக பரிவர்த்தனைகளுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஆலோசிக்க 3 மாதங்களுக்கு ஒருமுறை முதல் சனிக்கிழமை அன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில ரியல்எஸ்டேட் துறையான மனை வர்த்தகத்தை யும் ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர ஆலோசனை நடைபெறுவதாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டமும், இந்த ஆண்டின் முதல் கூட்டமும் நாளை மறுதினம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தில், கூட்டத்தில் கட்டுமானத் துறையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நிதியமைச்சக அதிகாரிகளுக்கும் கட்டுமானத் துறையினருக்கும் இடையே நடைபெற்ற கூட்டத்தின் போது கட்டுமானத்துறையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நடைபெற உள்ள கூட்டத்தில் கட்டுமானத் துறையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவது குறித்து முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால், இதற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், முடிவு எடுப்பது சந்தேகம் என்றும் அதிகாரிகள் மட்டத்திலான தகவல்கள் கூறுகிறது.