மே.வங்காள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எலியும், பூனையுமாக இருந்தவர்கள்.

மம்தா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் எழுச்சியும், பா.ஜ.க.வின் அபரிமிதமான வளர்ச்சியும் காங்கிரஸ் மற்றும் சி.பி.எம். கட்சிகளை  மூன்றாம் , நான்காம் இடத்துக்கு தள்ளி விட்டன.

இதனால் அந்த இரு கட்சிகளும் சிறிய அளவிலான உடன்பாட்டை ஏற்படுத்தியுள்ளன.

அந்த மாநிலத்தில் உள்ள 6 தொகுதிகளில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுவது இல்லை என்பதே அந்த உடன்பாடு. மே.வங்க மாநில அரசியலில் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்பம் என்பதில் சந்தேகம் இல்லை.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்ற 4 தொகுதிகளில் சி.பி.எம். போட்டியிடாது. அதுபோல் சி.பி.எம். கடந்த தேர்தலில் ஜெயித்த முர்ஷிதாபாத், ராய்கஞ்ச் ஆகிய இரு இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தாது.

உள்ளூர் காங்கிரசார் – இந்த உடன்பாட்டை ஏற்கவில்லை. காரணம்:முர்ஷிதாபாத் ,ராய்கஞ்ச் ஆகிய இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் கடந்த தேர்தலில் சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் தோற்றது.  .இந்த முறை எளிதாக அந்த இரு தொகுதியிலும் வெல்லலாம் என காங்கிரஸ் கருதியது.

மார்க்சிஸ்ட் கட்சியுடன் உடன்பாடு வேண்டாம் என்று கட்சி மேலிடத்துக்கு மே.வங்க காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா கடிதம் எழுதி இருந்தார்.இருப்பினும் ராகுல் எடுக்கும்  முடிவுக்கு கட்டுப்படுவதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தேசிய கண்ணோட்டத்தை  கருத்தில் கொண்டு-இந்த ‘ 6 தொகுதிகளில் ஒருவரை எதிர்த்து மற்றவர் போட்டியிடுவது இல்லை’’ என்ற உடன்பாட்டுக்கு ஒப்புக்கொண்டார் ராகுல்.

ராகுல் முடிவை ஏற்று கொள்வதை தவிர மே.வங்க காங்கிரசுக்கு வேறு வழி இல்லை.

-பாப்பாங்குளம் பாரதி

 

 

 

 

 

-mmmம்

 

ம்ம்

 

m