சென்னை,

ங்கக்கடலில் புதிய காற்றழுத்த மண்டலம் உருவாகி இருப்பதால் தமிழகத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழக வானிலை மையம் அறிவித்து உள்ளது.

மேலும்,  மேலடுக்கு சுழற்சி,  தெற்கு ஆந்திர கடல் பகுதியில் வளி மன்டல அடுக்கு சுறழ்சியாலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

இதன் காரணமாக  அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

வங்கக்கடலில் தற்போது உருவாகி இருக்கும்  காற்றழுத்த தாழ்வுநிலை  காரணமாக,  வடக்கு கடலோர ஆந்திரா முதல் கன்னியாகுமரி கடல் பகுதி வரை பரவியுள்ளது.

அதிலும், தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் வடக்கு கடலோர தமிழகப் பகுதிகளில் சற்று வலுவாக உள்ளது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேக மூட்டத்து டன் காணப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.