சென்னை:
தமிழ்நாடு ஐஎன்டியுசிக்கு புதிய அட்டாக் கமிட்டி நியமித்து இருப்பது சட்ட விரோதமானது என ஐஎன்டியுசி தலைவர் ஜி.காளன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் ஓசூரில் 3 நாள் (ஜூலை 23 – 25) ஐஎன்டியுசி மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் LPF, AITUC, CITU, HMS, BMS தொழிற்சங்கத்தை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். மூன்றாவது நாள் நிகழ்ச்சியில் 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து பேசிய காளன், கே.எஸ்.கோவிந்தராஜன், கே.ஏ.மனோகரன் ஆகியோர் செயல் தலைவர் பதவி வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள் என்று பேசினார். அதைத் தொர்ந்து செகரட்டரி ஜெனரல் ஆர்.பி.கே. முருகேசன் தேர்தல் விதிமுறைகளை விளக்கமாக எடுத்துரைத்தார்.
இதற்கிடையில் கே.எஸ்.கோவிந்தராஜன், வி.ஆர்.ஜெகநாதன், கே.கே.களஞ்சியம் ஆகியோர் சேர்ந்து திட்டமிட்டு, மாநாட்டில கலவரம் ஏற்படுத்த வெளியிலிருந்து கொண்டுவந்த ரவுடிகளை கொண்டு நாற்காலிகளை எடுத்து மேடையை நோக்கி வீசியும், மாநாட்டு பிரதிநிதிகள்மீது வீசியும் ரகளையில் ஈடுபட்டனர்.
இதனால் மாநாட்டு பந்தலில் பரபரப்பு ஏற்பட்டது. தடுக்க முயன்றவர்களை கத்தி, கம்புகளை காட்டி மிரட்டினார்கள்.
இந்த குழப்பமான சூழ்நிலையில், ஐஎன்டியுசி விதிமுறைப்படி ”செயல் தலைவர்” என்ற பதவி கிடையாது என்றும், அதனால் அப்படி ஒரு பதவி யாருக்கும் தர முடியாது என்றும் காளன் பேசினார். தொடர்ந்து
ஏற்கனவே 1995ல் நடைபெற்ற மாநாட்டில், விதிமுறையில் இல்லாத பதவிகளை வாழப்பாடி ராமமூர்த்தி அறிவித்ததை எதிர்த்து, பி.எல்.சுப்பையா வழக்கு தொடர்ந்தபோது, சென்னை உயர் நீதிமன்றம் “பைலா” வில் இல்லாத பதவிகளுக்கு தேர்தல் நடத்தியது தவறு என்று தீர்ப்பு கூறியது, அதேபோல் பி.எல்.சுப்பையா அணியினர் நடத்திய தேர்தலும் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளதை சுட்டிக்காட்டி காளன் பேசினார்..
மாநாட்டில் நடைபெற்ற குழப்பம் காரணமாக தற்போது, தேர்தல் நடத்த முடியாததால், தற்போது பதவியிலுள்ள தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அடுத்த மாநாட்டில் தேர்தல் நடைபெறும் வரை பதவியில் நீடிக்க தீர்மானம் கொண்டு வந்து முன்மொழியப்பட்டது. மாநாட்டி பிரதிநிதிகள் கையை தூக்கி தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.
இதற்கிடையில் மாநாட்டில் குழப்பத்தை உண்டு பண்ணிய கே.எஸ்.கோவிந்தராஜனை ஐஎன்டியுசி தலைவர் சஞ்சீவரெட்டி, தமிழ்நாடு தலைவராக நியமித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் கே.எஸ்.கோவிந்தராஜன், வி.ஆர்.ஜெகநாதன், கே.கே.களஞ்சியம் ஆகியோரை நிர்வாகிகளாக நியமித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. ஆனால், இதுபற்றி ஐஎன்டியுசி-க்கு தகவல் ஏதும் வரவில்லை.
மாநாட்டு சம்பவங்கள் பற்றி சஞ்சீவரெட்டிக்கு விவரமாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. இருப்பினும், கே.எஸ்.கோவிந்தராஜனின் பேச்சசைகேட்டுககொண்டு சஞ்சீவரெட்டி தமிழ்நாடு ஐஎன்டியுசியை கலைத்துவிட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்க கே.எஸ்.கோவிந்தராஜன் தலைமையில் அட்டாக் கமிட்டி அமைத்து இருப்பது ஜனநாயயக படுகொலையாகும், சட்டத்தை மீறிய செயலாகும். ஆகவே புதிய நிர்வாகிகள் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், தமிழ்நாடு ஐஎன்டியுசி ஜனநாயக முறைப்படி இயங்க ஆதரவு தரும்படியும் ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொண்டுள்ளார்.