a
ல நூற்றாண்டுகளாகக் கண்காணிக்கப்படாமல் ஒதுக்கப்பட்ட பிறகு, இப்போது தான் நேபால் முஸ்லிம்கள் ஒரு பிரகாசமான எதிர்கால நம்பிக்கையுடன் வெளிவருகின்றனர்.
அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ள முன்னாள் அரச அரண்மனையிலிருந்து கல்லெறி தூரத்தில் அமைந்துள்ள காத்மாண்டுவின் ஜமா மஸ்ஜித்தில் பேகம் ஹஸ்ரத் மஹால் அவர்களுடைய கல்லறை அதன் கடந்த கால அழகையும் ஆடம்பரத்தையும் இழந்து ஒரு மூலையில் முடங்கியுள்ளது.
இந்தியாவின் அவத் சமஸ்தான அரசின் ராணி மஹால். இவர் 1857 இல் ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சியில் பெரியளவில் ஈடுபட்டிருந்தார். ஆங்கிலேயர்களால் அந்த எழுச்சி அடக்கப்பட்ட பின் அவர் இந்திய நகரம் லக்னோவிலிருந்து வெளியேறினார். பிரிட்டிஷ் அந்தக் கலகத்தை அடக்குவதற்கும் நகரத்தைச் சூறையாடுவதற்கும் ஆங்கிலேயர்களுக்கு உதவ தனது இராணுவத்தை கொடுக்க வந்திருந்த நேபாளின் அப்போதைய ஆட்சியாளர், ஜங் பகதூர் ராணா, மஹால் அவர்களுக்குத் தஞ்சம் வழங்கினார்.
b
மஹாலின் ஆதரவாளர்கள் பலர் அவரைத் தொடர்ந்து நேபாள் வந்தனர் என்று ஜமா மச்ஜித் செயலாளர் எம் ஹுசைன் கூறுகிறார். ஆனால் உண்மையில் இஸ்லாமியம் அதற்கு முன்னரே நேபாளத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
15 ஆம் நூற்றாண்டில் லாசாவிற்கு போகும் வழியில் முதலில் காஷ்மீர் வர்த்தகர்கள் திபெத்தின் தலைநகரான காத்மாண்டுவிற்கு வந்து சேர்ந்தனர். அவர்களில் பலர் பின்னர் கான்டிபூர் என்று அழைக்கப்பட்ட காத்மாண்டு மற்றும் பக்தபூர், லலித்பூர் ஆகிய இடங்களில் ராஜா ரத்னா மல்லா ஆட்சியின் போது குடியேறினர்.
காத்மண்டுவில் உள்ள அரண்மனையிலிருந்து மிக அருகாமையில் அமைந்திருக்கும் 500 வருடமாக இருக்கும் காஷ்மீரி தக்கியா மசூதி தான் இந்த வரலாற்றிற்கு ஒரு சான்று.
“நேபாள மாநிலத்தின் நல்லெண்ண அடிப்படையில் பல நூற்றாண்டுகளாக ஒரு அமைதியான சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்,” என்று ஹுசைன் விளக்குகிறார்.
ஆனால், சமீப காலமாக, 1996 முதல் 2006 வரை நீடித்த மாவோயிஸ்ட்களின் கிளர்ச்சியினால் உத்வேகம் கொண்டு, அவர்கள் அதிகமாகக் குரல் எழுப்புவது மட்டுமல்லாமல் அதிகமாக வெளிவர ஆரம்பித்துவிட்டனர்.
d
“மாவோயிஸ்ட் கிளர்ச்சி தான் அவர்களின் [முஸ்லிம்களின்] அரசியல் மற்றும் கலாச்சார உரிமைகளுக்கு வழிவகுத்தது,” என்று மசூதி வளாகத்தில் உள்ள தனது சிறிய அலுவலகத்தில் அமர்ந்துகொண்டிருந்த  ஹுசைன் கூறுகிறார்.
2008 ல் அதாவது முடியாட்சி ரத்துச் செய்யப்பட்டு மாவோயிஸ்டுகள் தலைமையில் ஜனநாயக முறையில் அரசு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டில் முதல் முறையாக முஸ்லீம் விழாக்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மரணத்திலிருந்து தப்பியது:
தாராய் அல்லது மதேஸ் பிராந்தியம் என அழைக்கப்படும் தெற்கு சமவெளிகளில் அமைந்துள்ள பான்கே தான் நாட்டின் 95 சதவீதம் முஸ்லிம்களின் இருப்பிடம். காத்மண்டுவிலிருந்து 500 கீ.மி. தூரத்தில், இந்தியா எல்லையை ஒட்டிய பான்கே மாவட்டத்தில், பல முஸ்லீம்களின் வீடுகள் அமைந்துள்ளது. காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள தங்கள் சகாக்களைப் போலின்றி, இந்தப் பகுதியில் உள்ள பெரும்பான்மையான முஸ்லிம்கள் நிலம் இல்லாத ஏழைகள்.
பொருளாதார ஏணியில் உயரத்தை எட்டிய சில முஸ்லிம்களில் 28 வயதான ஆலம் கான் என்பவரும் ஒருவர். பான்கேவில் உள்ள நேபாள்குன்ஜ் பகுதியில் வசிக்கும் கான், மதேஸ் பகுதியில் நடக்கும் நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதைகள், மற்றும் சட்டவிரோத கைதுகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் மனித உரிமை பாதுகாவலர்கள் கூட்டமைப்பு (Terai Human Rights Defenders Alliance ) என்ற அரசு சார்பற்ற அமைப்பில் பணிபுரிகிறார்.
“எல்லோரும் அவர்களது உரிமைகளைப் பெற்று கண்ணியத்தோடு வாழ வேண்டும்,” என்று நேபால்குஞ்ச் ராணி தலௌள்ள பகுதியில் உள்ள தனது சிறிய அலுவலகத்தில் இருந்து ஆலம் கூறுகிறார்.
மதேசியர்கள் அவர்கள் அனுபவித்த பாகுபாட்டிற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்த போது, 2007 இல் 17 நாட்களுக்கு ஆலம் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். நீண்ட காலமாக பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக மலைப்பாங்கான பகுதிகளைச் சேர்ந்த உயர் சாதி நேபாளிகளின் ஆதிக்கத்தில் நாடு உள்ளதாக மதேசிகள் புகார் அளித்தனர்.
“ஒரு நிலத்தடி மதேசி தலைவரை நேர்காணல் செய்ததற்காக கொலை மற்றும் ராஜதுரோக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டேன்,” என்று மனித உரிமை பாதுகாவலர்கள் கூட்டமைப்பில் (Terai Human Rights Defenders Alliance )
சேர்வதற்கு முன் ஒரு செய்தியாளராகப் பணிபுரிந்த கான் கூறினார். “ஆனால் அவர்களால் எதையும் நிரூபிக்க முடியவில்லை. அது ஒரு “மரணத்திலிருந்து தப்பித்த தருணம்”, என்கிறார் அவர்.
இப்போது கான், நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் சட்டவிரோத கைதுகள் போன்றவைப் பற்றி ஆவணப்படுத்த நேபாளின் தொலைதூர பகுதிகளுக்குப் பயணிக்கிறார். அவரது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, அவர் ஒரு முஸ்லீம் அல்லாத, மகர் இன பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். “நான் போலீஸ் காவலில் இருந்த போது அவள் எனக்கு உறுதுணையாக இருந்தாள். அதனால் நான் அவளைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன்” என்று கூறினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் அவரது குடும்பம் நர்ஸ் படிப்பு தனது மனைவியை ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறினார்.
கல்வி நிலையில் பின்தங்கிய பெண்கள்
மதநல்லிணக்கம் மற்றும் கலப்புத் திருமணங்கள் அரிதாக இருக்கும் ஒரு நாட்டில், பல சமுதாய விதிமுறைகளை உடைத்து அவர்களுக்கு ஒரு சவாலாக தொடர்ந்து இருக்கிறார் கான்.
முஸ்லிம்கள் நாட்டின் மிகவும் பின்தங்கிய குழுக்கள் அதிலும் முஸ்லீம் பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நேபாளில் வெறும் 26% முஸ்லீம் பெண்கள் மட்டுமே படிப்பறிவுள்ளவர்கள். சராசரியாகத் தேசிய பெண்கள் 55% அதில் 12% முஸ்லீம் பெண்கள் மட்டுமே மேல்நிலை பள்ளி கல்வியை முடிக்கிறார்கள்.
நேபாள்குஞ்ச் ஜமா மஸ்ஜித்தின் முன்னாள் தலைவர் அப்துல் ரகுமான், இந்த பண்புகளைச் சில இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் பொது பள்ளி முறைக்கு இடையே உணரப்படும் ஒரு இணக்கமின்மையை குற்றம் சாட்டுகிறார். ”பர்தா அணியும் முஸ்லீம் பெண்கள் (ஹிஜாப் அல்லது நிகாப் அணிபவர்கள்) கவனத்தை ஈர்க்கிறார்கள். அவர்களை எல்லோரும் வித்தியாசமாகப் பார்க்கின்றனர். இது ஒரு மனச் சித்திரவதை” என்றார்.
“அரசு முஸ்லீம்களின் கல்விக்கு சிறப்பு தொகுப்பு [நிதி உதவி] அல்லது இஸ்லாமிய மதிப்புகள் படி எங்கள் குழந்தைகளுக்குக் கல்வி கற்றுத்தர சுதந்திரம் கொடுக்க வேண்டும்” என்கிறார்.
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, அந்த ஆண்டு, வெறும் 5,000-ற்கும் குறைவான முஸ்லீம் பட்டதாரிகள் மற்றும் பட்டப்பின்படிப்பு படித்தவர்கள் இருந்தார்கள்.
2007 ல் மதரஸா வாரியம் அமைக்கப்பட்டது, நாட்டின் பல முஸ்லிம்களால் பேசப்படும் மொழியான உருதுவிலும் முதல் முறையாகப் பாடங்கள் கிடைக்க செய்யப்பட்டன.
அறிவியல், கணிதம், ஆங்கிலம் மற்றும் நேபாளி ஆகிய பாடங்களைக் கற்றுத்தரும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், பதிவு செய்யப்பட்ட மதராஸாக்களூக்கு நிதி உதவி அளிப்பதாக அரசு உறுதியளித்தது.
ஆனால் கொள்கை அறிவிக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், நேபாலத்தில் உள்ள போதிய உதவி இல்லை என் புகார் அளிக்கும் பாதிக்கும் மேலான 2,000 மதராஸர்களுக்கு இன்னும் பதிவு செய்யப்பட வேண்டும்.
d
பெண்களுக்காக ஆயிஷா பணத் என்ற ஆங்கில மீடியம் மதரஸாவை நடத்தி வரும் பத்ரே ஆலம் கான், அரசாங்கத்தின் உதவி போதுமானதாக இல்லை என்கிறார்.
2006 இல், ஆறு மாணவர்களோடு திறக்கப்பட்ட மதரஸாவில், இப்போது 406 பெண்களுக்குக் கல்வி வழங்குகிறது. மற்றவர்கள் சேர வேண்டும் என்று நினைக்கிறார்கள் ஆனால் உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறையினால், மாணவர்களை ஏற்க முடியாத நிலையில் பள்ளி உள்ளது என்று, கான் கூறுகிறார்.
“இந்தப் பள்ளி பெருந்தன்மையுடன்  பெண்கள் பர்தா அணிய அனுமதிக்கிறது. இந்த மதரஸாவில் இஸ்லாமிய கோட்பாடுகளோடு சேர்ந்து நவீன கல்வியயும் அளிக்கிறது,” என்று பள்ளியின் பிரின்சிபல் தலத் பர்வீன் விளக்குகிறார்.
இந்திய நகரமான கோரக்பூரச் சேர்ந்தவர் பர்வீன் ஆனால் அவரது கணவர் நேபாளை சேர்ந்தவர். நாட்டின் முஸ்லிம்கள் பலர் வறுமையின் காரணமாக உயர் கல்வி பயிலுவதிலிருந்து நிறுத்தப்படுகிறார்கள் என்று நம்புகிறார்.
“தரமான கல்வியுடன் இன்னும் அதிகமான கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் தேவைப்படுகிறது”, என்று 28 வயதான பர்வீன் என்கிறார்.
“எதையும் சாதிப்பதிலிருந்து பர்தா உங்களைத் தடுக்காது. நான் ஆங்கில இலக்கியத்தில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளேன், நிகாப் என் வழியில் வரவில்லை.”
ஒரு 36 வயது சமூக சேவகரான அப்துல் குவாவி, இலவச கல்வி, மாணவர் விடுதிகள் மற்றும் கல்வி உதவி தொகை போன்ற சிறப்புத் திட்டங்கள் முஸ்லீம்களை வறுமையிலிருந்து உயர்த்த தேவை என்று நம்புகிறார். ”ஆனால், இது செய்யப்படவில்லை” என்றும் அவர் கூறுகிறார்.
ஒரு பிரகாசமான எதிர்காலம்
நேபாள் நாட்டின் 30 மில்லியன் மக்கள் தொகையில் சுமார் 5 சதவீத தொகையாக இருக்கும் முஸ்லிம்கள் ஒரு தனித்துவமான குழு என்று சமுதாய தலைவர்கள் நம்புகிறார்கள்.
“முஸ்லிம்கள் மதேசில் வாழ்ந்தாலும் அவர்களது கலாச்சாரம் வேறுபட்டது,” என்று நேபாளத்தின் ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) யின் ஒரு உள்ளூர் தலைவர் அத்தர் ஹுசைன் ஃபரூகி கூறுகிறார். “நமது அடையாளம் கலாச்சாரம், மொழி, பொருளாதார நடவடிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் வித்தியாசமாக இருக்க வேண்டும்,”என்கிறார்.
விளிம்புநிலை குழுக்கள் பட்டியலில் முஸ்லிம்களைச் சேர்த்து, 2015 இல் நடைமுறைக்கு வந்த நேபாள நாட்டின் புதிய அரசியல் திட்டத்தில் முதல் முறையாக முஸ்லிம்களையும் சேர்த்துள்ளது. அரசியலமைப்பு தற்போது முஸ்லிம்களுக்கு வேலை ஒதுக்கீடும் உறுதி அளித்துள்ளது.
“ஈத் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது, முஸ்லீம் ஆணைக்குழு மற்றும் மதரஸா குழு உருவாக்கப்பட்டுள்ளது” என்ற ஃபருக்கி, தற்போதைய கூட்டணி அரசாங்கம் ஒரு பகுதியாக உள்ள அவரது கட்சி, நேபாள முஸ்லிம்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடும் என்றார்.
வருங்காலத்தைப் பற்றி முஸ்லிம்களுக்குப் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.