Harish-Rawat-720x480
உத்ரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் ஹரீஷ் ராவத் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. கடந்த மார்ச் மாதம், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள்  உறுப்பினர்கள் 9 பேர் உத்தரகாண்ட் ஆளுநர் கே.கே.பாலைச் சந்தித்து ஆட்சியைக் கலைக்கக் கோரி மனு அளித்தனர். அதனைப் பரிசீலித்த ஆளுநர் மார்ச் 28 ஆம் தேதி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்குமாறு முதல்வருக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையே அங்கு குடியரசு தலைவர் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது.  இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் இன்று அம் மாநில சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதற்காக குடியரசு தலைவர் ஆட்சி இரண்டு மணி நேரம் தளர்த்தப்பட்டது. இது இந்தியாவிலேயே முதல் முறை ஆகும்.
இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு குறித்து சீல் வைத்த கவரில் சுப்ரீம் கோர்ட்டில் அளிக்கப்படும். நாளை அது பிரிக்கப்பட்டு முடிவு  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இதற்கிடையே, இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் காங்கிரஸ் கட்சி  பெரும்பான்மையை நிரூபித்திருப்பதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன.