சென்னை: பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றமே தவிர ஆளுநர் மாளிகை அல்ல என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான   ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில்  தொங்கு சட்டப்பேரவை அமைந்துள்ள நிலையில், 108 இடங்களை கைப்பற்றிஉள்ள தவெக, ஆட்சி அமைப்பதற்காக,  கவர்னரை சந்தித்து உரிமை கோரினார்.  ஆனால், ஆளுநர் பெரும்பான்மைக்கான விவரங்களை பட்டியலிட்ட பிறகே ஆட்சிஅமைக்க அழைப்பு விடுப்பதாக வறியுள்ளார். இதனால் தமிழ்நாட்டில் புதிய அரசு பதவி ஏற்க முடியாரத சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையில் விஜய்க்கு அழைப்பு விடுக்கக் கோரி ஆளுநருக்கு பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும் என விஜய்யிடம் ஆளுநர் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார்.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தனது எக்ஸ்  பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த அரசியல் கூட்டணிக்கும் அல்லது அரசியல் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்க வில்லை என்றால், ஆளுநரின் கடமை என்ன?.சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முதன்மைக் கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். இது தான் அரசியல் விதி. இதுதான் நாடாளுமன்ற மரபு.

அந்தக் கட்சியின் தலைவர் தனக்குப் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்று நிரூபிக்க வேண்டிய களம் சட்டப்பேரவை; ஆளுநர் மாளிகை அல்ல. இது தான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு 1994 (3) எஸ்சிசி 1.இந்த விதியை விளக்கி வலியுறுத்திய தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளை நான் பாராட்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்..

[youtube-feed feed=1]