சென்னை:
சென்னை ஐகோர்ட்டுக்கு 15  புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
highcourt
சென்னை ஐகோர்ட்டின் மொத்த நீதிபதி பணியிடங்கள் 75 ஆகும். ஆனால், தற்போது 39 நீதிபதிகள் மட்டுமே பணி புரிந்து வருகின்றனர். மேலும் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிகை எடுக்கப்பட்டடு வந்தது. அதன் காரணமாக நீதிபதி பணியிடங்களுக்காக  30 பேரின் பெயர்கள்  பரிந்துரை செய்து அனுப்பப்பட்டது.
பரிந்துரைக்கப்பட்ட 30 பேரில்,  11 பேர் வக்கீல்கள், 19 பேர் மாவட்ட நீதிபதிகள். இந்த 30 பேரில் இருந்து 15 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
இந்த 15 பேரில், ஆர்.பார்த்திபன் (சென்னை), ஆர்.சுப்பிரமணியன் (சென்னை), கோவிந்தராஜ் (புதுச்சேரி), எம்.சுந்தர் (சென்னை), ஆர்.சுரேஷ்குமார் (சென்னை), நிஷாபானு (மதுரை ஐகோர்ட்டு கிளை), எம்.எஸ்.ரமேஷ் (அரசு வக்கீல், சென்னை), எஸ்.எம்.சுப்பிரமணியம் (சென்னை), அனிதா சுமந்த் (அரசு வக்கீல், சென்னை) ஆகிய 9 பேர் வக்கீல்கள்.
எஸ்.பாஸ்கர், ஏ.எம்.பஷீர் அகமது, ஜி.ஜெயச்சந்திரன் (சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டு), சி.வி.கார்த்திகேயன், டீக்காராமன், என்.சேஷாயி ஆகிய 6 பேர் மாவட்ட நீதிபதிகள்.  இவர்கள் நியமனம் தொடர்பான ஆணை இந்த வாரத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து அவர்கள் விரைவில் ஐகோர்ட்டு நீதிபதிகளாக பதவி ஏற்பார்கள்.